Northland இல் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஒரு வீட்டில் இருந்து போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

இது Black Power கும்பலுடன் தொடர்புடையது காவல்துறை கூறியது.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையான Operation Cobalt அதிகாரிகள் நேற்றைய தினம் Northland இன் சிறிய நகரமான Kawakawa வில் Johnston சாலையின் ஒரு வீட்டை சோதனை செய்த பின்னர் ஒரு நபர் கைது செய்யப்பட்டார் மற்றும் மெத்தாம்பேட்டமைன், பணம் மற்றும் துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Black Power கும்பலுடன் தொடர்புடைய அந்த முகவரியில் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் அந்த முகவரியை குறிவைத்ததாக துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கெவன் வெர்ரி கூறினார்.

அந்த முகவரியில் ஒரு ஷாட்கன், வெடிமருந்துகள் மற்றும் 3000 டொலருக்கும் அதிகமான பணத்தை மீட்டுள்ளனர்.

சிறிய அளவு கஞ்சாவுடன் ஒரு கிலோகிராம் மெத்தம்பேட்டமைனும் மீட்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 48 வயதுடைய நபர் இன்று Kaikohe மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.