நெல்சனில் Richmond நகரில் ஒரு உணவகத்தில் பீட்சா ஓவன் வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு முன்னதாக Lower Queen தெருவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவரில் துளையிடும் போது எரிவாயு குழாயில் துளை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தீயணைப்பு மற்றும் அவசரநிலை சேவை கூறியது.