மத்திய Bay of Plenty இல் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

Rūātoki, Awahau மற்றும் Tāneatua பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Rotorua முதல் Te Kaha வரை பலத்த மழை கண்காணிப்பு உள்ளது.

Whakatane மாவட்ட கவுன்சில் தகவல் தொடர்பு மேலாளர் Alexandra Pickles அவர்கள் பிராந்திய கவுன்சிலுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.

Whakatane இற்கு அருகில் உள்ள Valley வீதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக Whakatane இல் வெள்ளம் ஏற்பட்டதால், Bay of Plenty இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 2 இன் ஒரு பகுதி மூடப்பட்டது.

Awakeri மற்றும் Kutarere இடையேயான நெடுஞ்சாலையின் Waimana Gorge பகுதி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக Waka Kotahi கூறியது.

Wainui சாலை வழியாக இலகுரக வாகனங்கள் செல்லலாம் என்று அது கூறியது, ஆனால் அப்பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே Northland இல் இன்று நண்பகல் முதல் பலத்த மழை என்று எதிர்பார்க்கப்படுகிறது. Taranaki,    South Island இல் உள்ள West Coast மற்றும் Fiordland இற்கு ஆரஞ்சு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவு 9 மணியளவில், Horowhenua மற்றும் வெலிங்டன் பகுதியில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், Motueka வின் வடகிழக்கில் உள்ள Bay of Plenty மற்றும் Tasman பகுதியில் ஒரு கனமழை கண்காணிப்பு இருந்தது.

நெல்சன் மேயர் நிக் ஸ்மித் குடியிருப்பாளர்களை வடிகால் மற்றும் சாக்கடைகளை சரிபார்த்து சுத்தம் செய்யுமாறு எச்சரித்தார்.

வியாழன் இரவு 9 மணி முதல் சனிக்கிழமை மாலை 3 மணி வரை Wairau Valley இன் வடக்கே  Nelson, Tasman மற்றும் Marlborough ஆகிய இடங்களுக்கு MetService கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே சாலையில் செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.