இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் மதுரையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

அவர் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது CTV தமிழ் மற்றும் அரசன் நியூசிலாந்து.