Coromandel இற்கு ஆரஞ்சு கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை மற்றும் பலத்த காற்று இன்று இரவு 8 மணிக்கு Northland ஐ அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‌

நாளை அதிகாலையில் ஆக்லாந்து, Great Barrier Island மற்றும் Coromandel வரை கனமழை தாக்கவுள்ளது. 

Coromandel இல் நாளை அதிகாலை 3 மணி முதல் 150 முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும், இன்றிரவு முதல் ஒரு மணி நேரத்திற்கு 15 மிமீ முதல் 25 மிமீ வரை மழை பெய்யும் என்றும் MetService தெரிவித்துள்ளது.

Northland, ஆக்லாந்து மற்றும் Great Barrier Island இல் இன்று இரவு முதல் பலத்த மழை கண்காணிப்பு அமலில் உள்ளது.

மற்றும் நாளை காலை முதல் ஆக்லாந்து , Great Barrier Island, Coromandel மற்றும் கிழக்கு வைகாட்டோவில் பலத்த காற்று கண்காணிப்பு இருக்கும்.

ஆக்லாந்து கவுன்சில், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதிக காற்று மற்றும் கனமழை முன்னறிவிப்புக்கு முன்னதாக வடிகால் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்ய குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டது.

ஆக்லாந்து அவசரநிலை மேலாண்மை கடமை கட்டுப்பாட்டாளர், ரேச்சல் கெல்லேஹர், நிலைமை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றார்.

மின்வெட்டுக்கு பதிலளிக்க அதன் குழுக்கள் தயாராக இருப்பதாக வெக்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைமை செயல்பாட்டு அதிகாரி பீட்டர் ரியான் கூறுகையில், ஊழியர்கள் தங்களால் முடிந்தவரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் எந்த மின் வெட்டுக்களையும் மீட்டெடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.