Christchurch இல் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் 12-15 வயதுடைய நான்கு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்பொருள் அங்காடி, Dairy shop, மீன் கடை மற்றும் சிப்ஸ் கடையை உடைத்து இந்த சிறுமிகள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை 4.45 மணியளவில் அவர்கள் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலில் St Martins இல் உள்ள Wilsons சாலையில் New World பல்பொருள் அங்காடியை வாகனத்தை பயன்படுத்தி உடைத்து உள்ளே நுழைந்து திருட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து  அதே வாகனத்தை பயன்படுத்தி Halswell இல் உள்ள Ensign தெருவில் அமைந்துள்ள ஒரு Dairy Shop மற்றும் மீன் கடை மற்றும் சிப் கடையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் அடுத்த மாதம் இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீவிர கொள்ளை சம்பவத்தில் பல குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

எனவே காட்சி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.