பிரபல நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் லியோ.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான அளவில் லோகேஷ், பாடல் ஒன்றை திட்டமிட்டுள்ளாராம். இந்தியன் படத்தில் வரும் கப்பலேறி போயாச்சு பாடலை மிஞ்சும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் பாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாடலுக்காக 2000 டான்சர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தினேஷ் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடன இயக்குநராக செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கென தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட யூனியன்களை சேர்ந்த டான்சர்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பாடலுக்காக மே மாதம் 20ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை ரிகர்சல் செய்யப்பட உள்ளதாகவும் ஜுன் 2ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை பாடல் சூட் நடத்தப்படவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.