சனிக்கிழமை மாலையில் இருந்து Northland முழுவதும் கனமழை மற்றும் புயல் வீசும் என்று Metservice கணித்துள்ளது.

இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்து, Coromandel மற்றும் Bay of Plenty ஐ அடையும் என Metservice கூறுகிறது.

Northland இல் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 42 மணி நேரமும், ஆக்லாந்து மற்றும் Coromandel பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையும் பலத்த மழை பெய்யும் என்று Metservice வானிலை ஆய்வாளர் தெரிவித்தார்.

Northland, ஆக்லாந்து மற்றும் Coromandel ஆகிய இடங்களில் இன்று மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.

Bay of Plenty மற்றும் மத்திய உயர்நாடு உட்பட வைகாடோ முதல் வெலிங்டன் வரை இன்று காலநிலை சீராக உள்ளது. ஆனால் மேற்கு Bay of Plenty இல் மாலையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.