Middlemore மருத்துவமனையில் பணிபுரிந்த போலி மருத்துவருக்கு தற்போது  Manukau மாவட்ட நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

31 வயதான யுவராஜ் கிருஷ்ணன் என்ற குறித்த போலி மருத்துவர், பயிற்சிச் சான்றிதழ், CVகள் மற்றும் கல்விப் பதிவுகள் ஆகியவற்றைப் போலியாகக் காட்டி, கோவிட்-19 தொற்று பரவிய காலகட்டத்தில் respiratory வேலையை பெற்றுக் கொண்டார்.

இந்த போலி மருத்துவர் நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளையும் பரிந்துரைகளையும் வழங்கியதுடன், மொத்தம் 80 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஒரு சக ஊழியர் அவரை போலி மருத்துவர் என அடையாளம் கண்டுகொண்டபோது, ​​அவர் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் மருத்துவ மாணவராக நடித்தமை தெரியவந்துள்ளது.

மேலும் போலந்தில் மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடங்கிய அவர் அதை ஒருபோதும் முழுமையாக முடிக்கவில்லை என்றும் அதை அவர் போலித் தகுதிகளுக்கான அடிப்படையாக பயன்படுத்தினார் எனவும் கூறப்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021 க்கு இடையில் அவர் ஒரு டாக்டராக நடித்து பல வேலைகளுக்கு விண்ணப்பித்து தோல்வியுற்றார்.

மேலும் ஒரு டெர்மட்டாலஜி கிளினிக்கில், சிகிச்சை அளிப்பது எப்படி என கூகுளில் பார்த்தார்.

இந்நிலையில் கிருஷ்ணனின் வழக்கறிஞர் அந்த நபருக்கு அடிப்படை உளவியல் பிரச்சனைகள் இருப்பதாக கூறினார்.

நீதிபதி நெவின் டாசன் கூறுகையில், கிருஷ்ணன் சுய-உரிமையின் சிதைந்த உணர்வைக் கொண்டுள்ளார் மற்றும் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பெரும்பாலான குற்றச்செயல்கள் உளவியல் பிரச்சினைகள் மற்றும் குடும்ப அழுத்தங்களால் ஏற்படுகிறது என கூற முடியாது என்றார்.

இந்நிலையில் நீதிமன்றம் குறித்த போலி மருத்துவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.