குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த 'சாகுந்தலம்' படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் சிட்டிபாபு, "சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. அவரது நோய் எல்லாம் நாடகம். அனுதாபத்துடன் தனது படங்களுக்கு விளம்பரம் பெற முயற்சிக்கிறார். கதாநாயகி அந்தஸ்தை இழந்து விட்டார். சகுந்தலை கதாபாத்திரத்துக்கு பொருத்தமில்லாத அவரை எப்படி தேர்வு செய்தார்கள். படத்தை ஓடவைக்க சமந்தா தனது உடல்நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரங்கள் செய்கிறார்' என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு காது மடல்களில் அதிகமாக முடி வளர்ந்து இருக்கும். அதை வைத்து சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், "காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பதுதான் காரணம் என்று வந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்'' என்று குறிப்பிட்டு சிட்டிபாபுவை விமர்சித்தார்.

இதற்கு தற்போது சிட்டி பாபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். அதில் தனது பெயர் குறிப்பிடப்படாததால் சமந்தாவின் பெயரையும் குறிப்பிடவில்லை. என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என கூறி உள்ளார். சிட்டிபாபுவின் கருத்துக்கு சமந்தா பதிலளிப்பாரா இல்லையா என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.