ஆக்லாந்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலாவதாக அதிகாலை 1.20 மணியளவில் Botany சாலையில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் கொள்ளையர்கள் திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

குற்றவாளிகள் ஒரு வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து வெளியேறினர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ‌நள்ளிரவு 1.30 மணியளவில், Ponsonby சாலையில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடைக்குள் நுழைய ஒரு வாகனம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு வாகனம் சம்பவ இடத்தில் கைவிடப்பட்டதுடன் மற்றுமொரு வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பிறகு தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்து மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயது இளைஞன், இன்று (25) ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் 17 வயது இளைஞன் ஆக்லாந்து இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் 16 வயது இளைஞன், இளைஞர் சேவைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‌இன்று அதிகாலை 1.30 மணியளவில், Meadowland Drive உள்ள மற்றொரு வணிக நிலையத்தில் திருட்டு நடந்ததாகக் கிடைத்த புகாரின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வாகனத்தை பயன்படுத்தி கடையை உடைத்ததாகவும் குற்றவாளிகளைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலை 3.30 மணியளவில், Campbells Bay இல் உள்ள Esplanade என்ற இடத்தில் ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குற்றவாளிகள் ஒரு வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் குறித்த வாகனத்தை மடக்கி பிடித்த பொலிஸார் இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

அவர்கள் இளைஞர் சேவைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைதின் போது வேப் பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அதிகாலை 5.20 மணியளவில் Pukekohe இல் Paerata வீதியில் ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வணிக நிலையத்தை உடைக்க ஒரு வாகனம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

பின்னர் அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் வாகனம் மீட்கப்பட்டது.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது.