ஆயிரக்கணக்கான நியூசிலாந்தர்கள் இப்போது இனவெறி சின்னங்கள், வெறுக்கத்தக்க வார்த்தைகள் மற்றும் கோஷங்களுக்காக குத்திக் கொண்ட பச்சைகளை இலவசமாக அகற்ற Chance for Change என்ற அறக்கட்டளை முன்வந்துள்ளது.

Chance for Change அறக்கட்டளை ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. தற்போது நியூசிலாந்தில் தனது கிளினிக்குகளைத் திறக்க உள்ளது.

இந்த அறக்கட்டளையின் ஸ்தாபகர் மைக் ஆண்டர்சன் கூறுகையில், அல் கொய்தாவால் தீவிரப்படுத்தப்பட்ட ஒரு நபருக்கு சிறையில் சிகிச்சை அளித்த பிறகு இந்த பணி தொடங்கியது என தெரிவித்தார்.

அவர் தனது முழு கையிலும் அல் கொய்தாவின் மீது உள்ள விசுவாசத்தை நிரூபிக்க பச்சை குத்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் அவர் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இனவெறியை தூண்டும் வகையில் குத்தப்பட்ட டெட்டூக்களை நீக்கும் இந்த பணி பல்லாயிரக்கணக்கான டாலர்கள் வரை செலவாகும் ஒரு செயல்முறையாகும், மேலும் நூற்றுக்கணக்கான நியூசிலாந்தர்கள் இந்த செயல்முறைக்காக துபாய் மற்றும் சிங்கப்பூர் வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இந்த செயல்முறையில், பச்சை குத்திக் கொண்ட நபருடன் அமர்ந்து, அவர்கள் ஏன் இப்படி மாறிவிட்டார்கள் மற்றும் பச்சை குத்தல்கள் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது போன்ற தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்பதும் அடங்கும்.

இந்த செயல்முறையில் எந்த வடுவும் இல்லாமல் 100 சதவிகிதம் இயல்பான சருமத்தை எதிர்பார்க்கலாம் என்றார்.

இதனிடையே நாட்டில் சுமார் 80,000 நியூசிலாந்தர்கள் பச்சை குத்திக்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களில் 1 சதவீதம் பேர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பச்சை குத்திக்கொள்பவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தில் 85,000 க்கும் அதிகமானோர் Chance for Change ஆஸ்திரேலிய கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளனர், மேலும் சேவைக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் 50 சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.