Christchurch இல் ஒரே இரவில் இரண்டு வேப் ஸ்டோர்கள் (Vape Store) கொள்ளையடிக்கப்பட்டன.

திங்கள்கிழமை (24) நள்ளிரவு 12.40 மணியளவில் Christchurch இல் உள்ள Hillsborough புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையம் கொள்ளையடிக்கப் பட்டது.

கடையை உடைக்க பயன்படுத்தப்பட்ட வாகனம் சம்பவ இடத்தில் கைவிடப்பட்டதுடன் கொள்ளையர்கள் வேப் பொருட்களை (ஒரு வகை புகைப்பிடித்தல் கருவி) எடுத்துக்கொண்டு வெள்ளை நிற மஸ்டா டெமியோ வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இதனிடையே Woodham சாலையில் உள்ள மற்றொரு வணிக நிலையம் நள்ளிரவு 1 மணியளவில் கொள்ளையடிக்கப்பட்டது, மேலும் குறித்த கடையில் இருந்து வேப் பொருட்கள் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அதிகாலை 5 மணிக்குப் பிறகு Christchurch இல் உள்ள சிறிய குடியிருப்பு பகுதியான Hornby இல் ஒரு வணிக வளாகத்தில் மூன்றாவது திருட்டு நடந்தது.  திருடப்பட்ட பொருட்கள் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.