நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 12,383 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஏப்ரல் 17 திங்கள் முதல் ஏப்ரல் 23 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 44 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2736 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (23) நள்ளிரவு நிலவரப்படி தீவிர சிகிச்சை பிரிவில் 09 பேர் உட்பட 292 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த வாரம் சமூகத்தில் 14,242 கொவிட் தொற்றுகள், 32 இறப்புகள் பதிவாகியிருந்ததுடன் 363 பேர் மருத்துவமனையில் மற்றும் ஒன்பது பேர் ICU இல் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.