சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி வெளியானது.

80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்தப் படத்தின் தியேட்டர் ரைட்ஸே மிகக் குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், சாகுந்தலம் படம் மிக மோசமான தோல்வியை தழுவியதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாகுந்தலம் படத்துக்கு முதல் நாளிலேயே எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேக்கிங்கில் ஃபேண்டசியாக இருந்தாலும் கதை, திரைக்கதை ரொம்பவே போர் அடித்ததாக ரசிகர்கள் நெகட்டிவான விமர்சனம் தெரிவித்திருந்தனர்.

இதனால் 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம், முதல் வாரம் முடிவில் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் தியேட்டர் உரிமை 35 கோடிக்கு தான் விற்பனையானதாம். பல ஏரியாக்களில் சாகுந்தலம் படத்தை வாங்கவே ஆள் இல்லை எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.ன

இந்நிலையில், திரையரங்குகளில் மட்டும் சாகுந்தலம் படம் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாம். இதனால் சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர், திரையரங்க விநியோகஸ்தர்கள் ரொம்பவே கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. சாகுந்தலம் படம் எதிர்பார்த்ததில் பாதி வசூல் கூட ஆகவில்லையாம். சமந்தாவால் தான் இந்த சோதனை என தயாரிப்பு தரப்பு புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.

சாகுந்தலம் படத்தில் முதலில் அனுஷ்கா நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரையரங்குகளில் தோல்வியடைந்த சாகுந்தலம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலாவது தயாரிப்பு தரப்புக்கு லாபம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.