Dunedin இல் நடைபாதைக்கு அருகில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Woodhaugh புறநகர்ப் பகுதியில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை 10 மணிக்குப் பிறகு, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.