Rotorua வில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (17) Sunset வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இன்று Rotorua இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.