Central Otago நகரமான Cromwell இல் நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் பெருமளவிலான கஞ்சா, 21 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்கள்  மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து Cromwell, Tarras மற்றும் Haast பகுதியில் உள்ள சொத்துக்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மெத்தாம்பேட்டமைன், கஞ்சா மற்றும் துப்பாக்கிகள் வைத்திருந்தமை தொடர்பான 12 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இரண்டாவது நபர் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை, மெத்தம்பேட்டமைன் விநியோகம், கஞ்சா விநியோகம் தொடர்பான எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

மூன்றாவது நபர், மெத்தம்பேட்டமைன் விநியோகம், கஞ்சா விற்பனை மற்றும் விநியோகம், சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தது மற்றும் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பான 12 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் இன்று குயின்ஸ்டவுன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்