ஆக்லாந்து பல்பொருள் அங்காடியில் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த ஐந்து பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நள்ளிரவுக்கு முன்னதாக Mt Roskill இல் அமைந்துள்ள Countdown சூப்பர் மார்க்கெட்டிற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.‌ சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு முன் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டனர்.

இதனையடுத்து காவல்துறை ஹெலிகாப்டர் ஐந்து பேரை பின் தொடர பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் Christini தெருவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து மற்றொரு வீட்டில் மறைந்திருந்த நான்காவது நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்தாவது நபரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.