Westland மற்றும் Tasman மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை அமுலில் உள்ளது, அதே நேரத்தில் கடற்கரையின் மற்ற பகுதிகளில் கனமழை கண்காணிப்பில் உள்ளது.

Otira விற்கு தெற்கே உள்ள Westland இல் 140 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்று MetService கூறுகிறது, இது வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தும்.

Tasman இல், 80 முதல் 120 மிமீ மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கடற்கரைக்கு அருகில் 50 முதல் 80 மிமீ வரை மழை பெய்யக்கூடும்.

Motueka மேற்கு, Tasman மாவட்டத்திற்கான கனமழை எச்சரிக்கை மாலை 5 மணி முதல் அமுல்படுத்தப்படும்.

ஆறுகள் மற்றும் ஏரிகளைச் சுற்றி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என MetService வானிலை ஆய்வாளர் அலெக் ஹோல்டன் தெரிவித்தார்.