ஆக்லாந்தின் Albany என்ற இடத்தில் கார் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 9:45 மணியளவில் Corinthian Drive இல் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதசாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பொலிஸார் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கின்றனர் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.