North Island நகரமான Matamata வில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததுடன் மூவர் மிதமான காயங்களுக்கு உள்ளாகினர்.

மாநில நெடுஞ்சாலை 14ல் மதியம் 1.05 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாலை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Hinuera சாலை மற்றும் Hopkins சாலையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.