நாசாவின் சூப்பர் பிரஷர் பலூன் இன்று நியூசிலாந்தில் Wānaka விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்டது.

கடந்த ஆண்டு ஐந்து முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டு Wānaka விமான நிலையத்தில் இருந்து இரண்டு அறிவியல் பேலோடுகளை ஏவ நாசா திட்டமிட்டது.

வானகா விமான நிலைய கடமை மேலாளர் ரஷ்லீ ஸ்மித் கூறுகையில், காலை 10 மணிக்குப் பிறகு ஒரு இழுவை லிப்ட் பலூன் ஊதத் தொடங்கியது, மேலும் ஒரு மணி நேரத்திற்குள் பலூன் முழுவதுமாக ஊதப்பட்டது.

காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததால் சிறிது தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் வெற்றிகரமாக பலூன் வானில் ஏவப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா தனது வான்வெளியில் சுட்டு வீழ்த்தியதை அடுத்து, இத்தகைய பலூன்கள் தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளன.

இந்த பலூன் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து சூப்பர் பிரஷர் பலூன் இமேஜிங் டெலஸ்கோப்பை எடுத்துச் செல்கிறது.

விண்வெளிப் பயணங்களுடன் ஒப்பிடும் போது செலவை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பத்தை சோதித்து வெற்றி பெறுவதே இந்த பலூன் ஏவுதலின் நோக்கம் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதனிடையே வானகா விமான நிலையம் மற்றும் விமான நிலையத்தை ஒட்டிய பூங்கா ஆகியவை பொதுமக்களுக்கு மூடப்பட்டன. எனவே சூப்பர் பிரஷர் பலூனைப் பார்க்க விரும்பும் எவரும் உயரமான நிலத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.