கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு எதிராக பல ஒடுக்குமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதாவது 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்றக்கூடாது என்று கடந்த ஆண்டு தலீபான்கள் உத்தரவிட்டனர். உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து தலிபான்கள் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிப்பதாக அறிவித்தனர்.

மேலும் புர்கா அணியாமல் வெளியே செல்லக்கூடாது, சிறுவர்கள் கேம் சென்டர்களுக்கு செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குறிப்பாக ஐநா சபையில் எந்த துறையிலும் ஆப்கன் பெண்கள் வேலையில் இருக்கக்கூடாது, ஜிம் போகக்கூடாது, பூங்காக்களுக்கு போக கூடாது போன்ற உத்தரவுகளை தலிபான்கள் தொடர்ந்து விதித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது புதிய உத்தரவையும் அவர்கள் பிறப்பித்துள்ளனர். அதாவது, தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள் அமைந்துள்ள உணவகத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். பெண்கள் மட்டுமல்லாது குடும்பங்களும் இந்த உணவகத்திற்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற இடங்களில் ஆண்/பெண் ரொமான்ஸ் செய்து கொள்வது அதிகரித்திருப்பதால் அதனை தடுக்கும் நோக்கத்தில்தான் இதுபோன்று சட்டங்கள் விதிக்கப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர் மேலும் கூறுகையில், இந்த தடையானது ஹெராட் நகரங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு மட்டுமே பயன்படும் என்றும், நாடு முழுவதும் இந்த தடை விதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர். எப்படி இருந்தாலும், பெண்களுக்கான தடையை நியாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.