இந்தியா: தமிழ்நாடு

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

DMK Files என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.