நியூசிலாந்து

Bay of Islands இல் உள்ள‌ Paihia கடற்கரை பகுதி மற்றும் Russell கடற்கரை பகுதிக்கு இடையே இரண்டு படகுகள் மோதுண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை 11.50 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு படகுகள் மோதிக்கொண்டதாகவும், குறைந்தது ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

ஒரு ஆம்புலன்ஸ் Paihia வில் உள்ள Marsden சாலைக்கு விரைந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சை அளித்தனர், மேலும் அவர் Middlemore மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.