ஆக்லாந்தில் இன்று அதிகாலையில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை 2 மணிக்குப் பிறகு நகர மையத்தில் உள்ள Jean Batten Place இல் நடந்த முதல் கொள்ளை சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து தெற்கு ஆக்லாந்தின் Papatoetoe என்ற இடத்தில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அதிகாலை 3 மணிக்கு முன்னதாக, Clover Park dairy Shop இல் இடம்பெற்ற ஒரு கொள்ளை சம்பவத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் சிகரெட்டுகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மேலும் இன்று மாலை 4.30 மணியளவில், மேற்கு ஆக்லாந்தின் Henderson உள்ள Bruce McLaren சாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.