இன்று மாலை Tauranga, Te Puke மற்றும் Papamoa ஆகிய இடங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று MetService எச்சரிக்கிறது.

மிகக் கடுமையான மழை பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று மாலை 6 மணியளவில் Paengaroa வை புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தெற்கு வைகாடோ, Taupo, Ruapehu மற்றும் Otorohonga‌ ஆகிய இடங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை தென்கிழக்கு நோக்கி நகர்கிறது, மேலும் 5.30 மணிக்கு Tauranga, Te Puke மற்றும் Papamoa அருகே மற்றும் 6.00 மணிக்கு Paengaroa அருகில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு, Cambridge, Karapiro, Arapuni, Maungatautari, Te Miro, Leamington, Whitehall மற்றும் Rotoorangi அருகே கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என MetService கூறியது.

இந்த கடுமையான இடியுடன் கூடிய மழை தெற்கு நோக்கி நகர்கிறது, மேலும் மாலை 5.30 மணிக்கு Ngaroma, Waipapa, Arohena மற்றும் Panetapu அருகே மற்றும் மாலை 6.00 மணிக்கு Barryville மற்றும் Northern Hauhungaroa Range  இற்கு அருகில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.