நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 12,129 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஏப்ரல் 03 திங்கள் முதல் ஏப்ரல் 09 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.

புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில், 4973 பேர் மீண்டும் தொற்றுக்குள்ளானவர்கள்.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 08 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு நிலவரப்படி தீவிர சிகிச்சை பிரிவில் 07 பேர் உட்பட 219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.