திருநங்கைகளுக்கு எதிரான இங்கிலாந்து பெண் செயற்பாட்டாளர் Posie Parker என அழைக்கப்படும் Kellie-Jay Keen-Minshull  நியூசிலாந்துக்கு வருகை தந்ததை அடுத்து நியூசிலாந்தில் உள்ள ட்ரான்ஸ் சமூகத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்நிலையில் அவரது வருகையை அடுத்து அச்சுறுத்தலுக்கு உள்ளான திருநங்கைகள் அல்லது ரெயின்போ சமூகத்தைச் (LGBT) சேர்ந்த யாரேனும் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை வலியுறுத்துகிறது.

Posie Parker நியூசிலாந்திற்கு வந்ததிலிருந்து, இங்குள்ள திருநங்கைகள் சமூகத்தின் மீது ஆன்லைனில் வெறுப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ஆன்லைன் தீவிரவாதத்தை கண்காணிக்கும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பாலின அடையாளம், இனம், நம்பிக்கை, இயலாமை மற்றும் வயது ஆகியவற்றின் காரணமாக எழும் வன்முறை அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காவல்துறை கூறுகிறது.

எனவே அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர்கள் அல்லது இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளும் பொலிஸ் பன்முகத்தன்மை தொடர்பு அதிகாரிகளுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.