இன்று பிற்பகல் Blenheim இற்கு தெற்கே திராட்சை பழங்களை ஏற்றிச் சென்ற இரண்டு  டிரக்குகள்  விபத்துக்குள்ளானதால், Marlborough வில் உள்ள மாநில நெடுஞ்சாலை 1 இல் ஓட்டுநர்கள் தாமதத்தை எதிர்பார்க்கலாம்.

SH1 மற்றும் Cloud Bay Drive சந்திப்புக்கு அருகே மாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏராளமான திராட்சை பழங்கள் சாலையில் கொட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Waka Kotahi NZTA, அந்த பகுதியில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொள்கிறது.