North Island இன் East Coast இல் பலத்த மழை பெய்து வருகிறது.

இது கேப்ரியல் சூறாவளியின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

நேப்பியருக்கு வடக்கே உள்ள Gisborne மற்றும் Hawke's Bay ஆகிய இடங்களில் ஆரஞ்சு நிற கனமழை எச்சரிக்கையை MetService வெளியிட்டுள்ளது.

இந்த வார இறுதியில் Tai Rāwhiti  கடற்கரையின் சில பகுதிகளில் அலை எச்சரிக்கையும் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மற்றும் அதிகாலை வேளையில் Mahanga வில் இருந்து Potikirua Point வரை நான்கரை மீற்றர் வரையான அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இன்றும் நாளை அதிகாலையிலும் மிக அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக Hawke's Bay Civil Defence தெரிவித்துள்ளது.

அனைத்து அவசரகால சேவைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிராந்திய கவுன்சில் அணிகள் தயார் நிலையில் உள்ளன என்று அது கூறியது.

தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்கள் அவசரகாலப் பொருட்களை தயார் படுத்துகின்றன மற்றும் Devil's Elbow வில் உள்ள மாநில நெடுஞ்சாலை இரண்டு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளது.

Esk Valley வில் 40 முதல் 110 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாரதிகள் நிலைமையை கருத்தில் கொண்டு வாகனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிவில் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர் லில்லியன் டெ ஹவு-வார்ட், பாதுகாப்பற்றதாக உணரும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றார்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் Northland மற்றும் ஆக்லாந்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று MetService தெரிவித்துள்ளது.

கனமழை, ஆலங்கட்டி மழை, பலத்த காற்று மற்றும் சூறாவளி ஆகியவற்றுடன் சில இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அது கூறியது.

கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.