இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களிடம் இருந்து உள்வரும் நிதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வசதியாக புதிய கைப்பேசி செயலி மே 01 முதல் அமுலாகவுள்ளது.

புதிய செயலியான ‘லங்கா ரெமிட்’ இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக பிரதான விமான நிலையத்தில் சில தீர்வை சலுகைகளையும் வழங்கவுள்ளது.

இந்த நிவாரணம் ஐந்து வகைகளின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

1) 2,400 முதல் 4,799 டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையை அனுப்பும் இலங்கையர்களுக்கு 600 டொலர் மேலதிக வரிச் சலுகை.

2) 4,800 முதல் 7,199 டொலர் வரை அனுப்பும் தொழிலாளர்கள் 960 டொலர் கூடுதல் தீர்வை நிவாரணம் பெறுவார்கள்.

3) 7,200 முதல் 11,999 டொலர் வரை அனுப்பும் ஊழியர்களுக்கு 1,440 டொலர் கூடுதல் வரி நிவாரணம் பெறுவார்கள்.

4) 12,000 முதல் 23,999 டொலர் வரை பணம் அனுப்பும் தொழிலாளர்கள் கூடுதலாக 2,400 டொலர் வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள்.

5) 24,000 டொலர் அல்லது அதற்கு மேல் அனுப்புபவர்கள் மேலதிகமாக 4,800 டொலர் வரிச் சலுகைக்கு தகுதியுடையவர்கள்.

ஒரு வருட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பணத்தை நாட்டுக்கு அனுப்பிய எவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிவாரணம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்