50 வருட கால இடைவெளியின் பின்னர் நிலவுக்கு அனுப்பவுள்ள விண்வௌி வீரர்களை நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது.

அதற்காக 04 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

அவர்களில் பெண்ணொருவரும் கறுப்பினத்தவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

கிறிஸ்டினா கோச்(Christina Koch) என்பவர் நிலவுக்கு
பயணிக்கவுள்ள முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக பதிவாகவுள்ளார்.

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள முதலாவது கறுப்பின விண்வெளி வீரராக விக்டர் குளோவர்(Victor Glover)பதிவாகவுள்ளார்.

Christina Koch, Victor Glover, Reid Wiseman மற்றும் Jeremy Hansen ஆகிய நால்வரும் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்கள் நிலவுக்கு பயணிக்கவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.