அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நியூயோர்க் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டொனால்ட் ட்ரம்ப் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

76 வயதான டிரம்ப், கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாகக் கருதப்படுகிறார்.