ஆக்லாந்தின் North Shore பகுதியில் காரில் இருந்த நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் நிக் போலண்ட் இது தொடர்பில் கூறுகையில்‌...

மார்ச் 29 அன்று Mairangi Bay இல் உள்ள Volleyball Centre கார் பார்க்கிங்கில் கறுப்பு தாடியுடன் 162 செ.மீ உயரம் கொண்ட ஒரு நபர், மாலை 3:30 மணியளவில் ஒரு காரை அணுகினார்.

பின்னர் காரில் இருந்தவர்களிடம் ஒரு கத்தியைக் காட்டி கொள்ளையில் ஈடுபட முயற்சித்தார். அவர்கள் குற்றவாளியை விரட்ட முயன்ற போது ஒருவருக்கு மிதமான காயம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட ஆண் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுள்ளார். மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரின் படத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடம் இருந்து பொலிஸார் தகவல்களை முறையிடுகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.