இந்தியா: தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி நடைபெறும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி முன்பதிவு தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாரத்தானில் ஓடும் திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகையாக எனது சொந்த செலவில் திமுக இளைஞரணி சார்பாக ரூ.1,000 வழங்கப்படும். நான் சட்டமன்றத்தில் எனது கன்னிப்பேச்சில் பேசியதே திருநங்கைகளுக்காகத்தான்." என்றார்.

மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது வாட்ஸ்-அப் யுகம், அதிகமாக ரீச் ஆகணும், ரீட்வீட் ஆகவேண்டும் என்பதற்காக உண்மையா பொய்யா என்றே ஆராயாமல் தவறான தகவல்களை Forward செய்துவிடுகிறோம். செய்தி உண்மையா? இல்லையா என்று பகுத்தறிய வேண்டும்.

தமிழ்நாட்டில் சிலர் அருவெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர். பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். பகுத்தறிவை வளர்த்துக்கொண்டு, நமக்கு வரும் செய்தியை ஆராய்ந்து உண்மையா பொய்யா என்பதை அறிந்து, இன்னொருவருக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.