இன்று பிற்பகல் Whitianga வில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 70 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவல்படி, நண்பகலுக்குப் பிறகு, Whitianga வில் உள்ள Tairua Whitianga  சாலையில் விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இரண்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாலை மூடப்பட்டுள்ளது, மாற்றுப்பாதை இல்லை.

மேலும் வாகன சாரதிகள் பயணத்தை பயணத்தை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த காயமடைந்த இருவரும் ஹெலிகாப்டர் மூலம் ஆக்லாந்து நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.