திருநங்கைகளுக்கு எதிரான இங்கிலாந்து பெண் செயற்பாட்டாளர் கெல்லி-ஜே கீன்-மின்ஷூலின் ஆக்லாந்து பேரணியில் திருநங்கைகளுக்கு ஆதரவாக போரட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கீன்-மின்ஷூலின் மீது தக்காளி சாற்றை தெளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குறித்த பெண் மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பொதுவான தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை பொலிசார் உறுதிப்படுத்தினர்.

குற்றம் சாட்டப்பட்டவர் எலி ருபாஷ்கின் என்ற சமூக ஆர்வலர் ஆவார்.

புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் பிடியாணை தாக்கல் செய்யப்படும் என்று பொலிஸார் அவரிடம் கூறியதாக ரூபாஷ்கின் முன்பு கூறியிருந்தார்.

இதனிடையே ருபாஷ்கினின் ட்விட்டர் பக்கத்தில், காலை 11.51 மணிக்கு, நான் நியூயார்க்கிற்குப் போகிறேன்" என்று கூறி, ருபாஷ்கின் விமானத்தில் இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தக்காளி சாறு பாட்டிலின் அருகில் அமர்ந்து “அன்புள்ள போஸி, உங்கள் இனப்படுகொலை வெறுப்பு உலகின் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, உங்கள் வெறுப்பிற்காக நீங்கள் ஊதியம் பெறுவீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.