நியூசிலாந்து செஞ்சிலுவைச் சங்கம் Wairoa வில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்ப்பதற்காக 1 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடை நிதியை அறிவித்துள்ளது.

இந்த நிதி இது காப்பீட்டின் கீழ் இல்லாத வேலைகளுக்கு உதவ ஒதுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல், ரெட்டிகுலேட்டட் பிளம்பிங், அத்தியாவசியமான குளியலறை மற்றும் மின்சார பழுதுபார்ப்புகளுக்கு இந்த பணம் பயன்படும்.

மேலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் நாங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறோம்.

வரும் வாரங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக நாங்கள் அதிக நிதியை ஒதுக்குவோம் என்று நியூசிலாந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாரா ஸ்டூவர்ட்-பிளாக் தெரிவித்தார்.