நியூசிலாந்து அரசு ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை.

நியூசிலாந்து முழுவதும் உள்ள சுமார் 50,000 ஆசிரியர்கள் கடந்த வாரம் வியாழன் அன்று ஒரு நாள் வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பள்ளிகளில் வளங்களைச் அதிகரிக்க சிறந்த ஊதியம் வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அமைச்சுக்கும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்திற்கும் (PPTA) இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

PPTA செயல் தலைவர் கிறிஸ் அபெர்க்ரோம்பி இது தொடர்பில் கூறுகையில்...

நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். PPTA மற்றும் கல்வி அமைச்சகம் இடையே நாளை ஒரு சந்திப்பு உள்ளது, விரைவில் ஒரு தீர்மானம் வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.