ஆக்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மாணவர்களிடம் ஆயுதமேந்திய மூவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்லாந்தின் தெற்கே அமைந்துள்ள கிராமப்புற பகுதியில் Clevedon சாலையில் உள்ள ACG Strathallan பள்ளி மாணவர்களை இரண்டு பேர் அணுகி, அவர்களிடம் பணம் மற்றும் மொபைல் போன்களை ஒப்படைக்கக் கோரினர் என்று போலீசார் கூறுகின்றனர்.
கொள்ளையடிக்கும் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
மேலும் ஒரு பெண் ஓட்டுநர் வெள்ளை அல்லது வெள்ளி ஸ்டேஷன் வேகன் வாகனத்தை செலுத்த மாணவர்களின் தொலைபேசிகளுடன் அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அந்த இரண்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது மிகவும் தீவிரமான சம்பவம் என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர், மேலும் இந்த குற்றத்தை செய்தவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* இந்த தகவல் முதலில் New Zealand Herald இல் வெளிவந்தது.