Breaking News

"எடப்பாடிய புடிச்சி ஜெயில்ல போடுங்க"; திடீரென சுற்றிவளைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் - ஷாக் ஆகிய உதயநிதி...!

"எடப்பாடிய புடிச்சி ஜெயில்ல போடுங்க"; திடீரென சுற்றிவளைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் -  ஷாக் ஆகிய உதயநிதி...!

இந்தியா: தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த மாதம் காலமானார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஆகியோர் நேற்றைய தினம் ஓ பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, 'ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளோம். முதல்வரும் அமைச்சர் சேகர்பாபுவும் நானும் ஓபிஎஸை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தோம்' என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு அமைச்சர் உதயநிதி அங்கிருந்து கிளம்ப காரில் ஏறினார். அப்போது அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உதயநிதியின் காரை முற்றுகையிட்டனர்.

ஆதரவாளர்கள் உதயநிதியைப் பார்த்து, 'சுமத்ராவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுனாமி.. எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். கோடநாடு வழக்கை விசாரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதியாகவே கொடுத்திருந்தீர்கள். எனவே, அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். எடப்பாடியை புடிச்சு உள்ளே தூக்கி போடுங்க சார்' என்றனர்.

இதைக் கேட்டதும் அமைச்சர் உதயநிதி ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டார்.

முதலில் ஏதோ கோரிக்கை தரவே வருகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி நினைத்தார். இருப்பினும், அவர்கள் திடீரென எடப்பாடியைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொன்னதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவர்களின் பேச்சுக்கு எந்தவொரு பதிலையும் சொல்லாத உதயநிதி கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லியவாறே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.