Breaking News

Gisborne மற்றும் Tauranga வில் பணம், போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் மூவர் கைது..

Gisborne மற்றும் Tauranga வில் பணம், போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் மூவர் கைது..

Gisborne இல் உள்ள ஒரு வீட்டில் 40,000 டொலர்கள் பணம், 16‌ கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் Tauranga வில் நான்கு துப்பாக்கிகள் ஆகியவற்றை நேற்றைய தினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்த அதிரடி நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், சப்ளைக்காக மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.