Breaking News

Dunedin நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது...!!

Dunedin நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது...!!

Dunedin நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மற்றொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மார்ச் 10 அன்று, நகர மையத்தில் உள்ள Thomas Burns  தெருவில் மாலை 4.40 மணியளவில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் முன்னதாக 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு புதன்கிழமை Dunedin மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் அவர் ஏப்ரல் 4ஆம் திகதி மீண்டும் ஆஜராகும் வரை காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இச் சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று Dunedin மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒரு அறிக்கையில், துப்பறியும் சார்ஜென்ட் ஹெய்டன் ஸ்மால் கூறுகையில்..

நேற்றைய தினம் பொலிசார் மேலதிக சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன் விளைவாக சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனம் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.