ஒடாகோ கடற்கரையில் மஞ்சள்-கண்கள் கொண்ட அரியவகை இரண்டு பென்குயின்கள் (Hoiho) நாய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு பாதுகாப்புத் துறை வலியுறுத்துகிறது.

இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் இந்த இரண்டு அரியவகை பென்குயின்கள் உயிரிழந்துள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், St Kilda கடற்கரையில் ஒரு Hoiho பென்குயின் ஒரு நாயால் துன்புறுத்தப்படுவதைக் கவனித்ததாக DOC கூறுகிறது. 

பின்னர் அந்த பென்குயின காயங்களால் இறந்தது.

மேலும் சமீபத்தில் Purakaunui Bay இல் விரிகுடாவில் ஒரு நாய் மஞ்சள் நிற கண்கள் கொண்ட ஆண் Hoiho பென்குயினை நொடிகளில் கொன்றது.

ஒரு ஊடக வெளியீட்டில், DOC ரேஞ்சர் ரிச்சர்ட் சீட், அனைத்து நாய் உரிமையாளர்களும் கடற்கரையில் தங்கள் செல்லப்பிராணிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது என கூறினார்.

Hoiho உலகின் அரிதான பென்குயின் இனங்களில் ஒன்றாகும், மேலும் எங்கள் கடற்கரையை அவைகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

நிலத்திலும் கடலிலும் பலவிதமான அச்சுறுத்தல்களால் அவற்றின் சனத்தொகை வேகமாக குறைந்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும் எந்த நாயும் வனவிலங்குகளை காயப்படுத்தும் திறன் கொண்டது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஏதேனும் வனவிலங்குகள் துன்புறுத்தப்படுவதை அல்லது தாக்கப்படுவதைக் கண்டால், அவர்கள் DOC யை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.