நியூசிலாந்து முழுவதும் உள்ள ஆரம்ப, இடைநிலை மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் சுமார்‌ 50,000 பேர் இன்று நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணவீக்கத்திற்கு ஏற்ப தங்கள் வேலைகளைச் செய்வதற்கு அதிக வளங்கள் மற்றும் ஊதிய உயர்வுகளைக் கோரி அவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வி அமைச்சுடனான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்ததை அடுத்து, முதுநிலை முதன்மை ஆசிரியர் சங்கம் (PPTA) மற்றும் நியூசிலாந்து கல்வி நிறுவனம் (NZEI) ஆகியவற்றால் இந்த வேலைநிறுத்த போரட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.