Breaking News

மத்திய ஆக்லாந்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் - பொலிஸாரால் தேடப்பட்ட பெண் காவல்நிலையத்தில் சரண்...!!

மத்திய ஆக்லாந்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் - பொலிஸாரால் தேடப்பட்ட பெண் காவல்நிலையத்தில் சரண்...!!

மத்திய ஆக்லாந்தின் Symonds தெருவில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பெண் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

57 வயதான டேனியல் ஓடெஸ் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆக்லாந்து நகர சிஐபியின் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஸ்டீவ் சால்டன் இது தொடர்பில் கூறுகையில்...

இந்த கொலையுடன் தொடர்புடைய 32 வயதான பெண்ணுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் அவர் Manukau காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்ட பெண் இப்போது கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்வதாகவும் மேலும் நாளை அவர் ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணைக்கு உதவிய பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தற்போது பொலிஸார் தேடவில்லை என்று அவர் மேலும் கூறினார்.