இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாட்டு கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் என்பது இடம்பெற்று வந்தது. இந்த குறவன், குறத்தி ஆட்டம் என்பது ஆதிகுடிகளான குறவர் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடத்தப்பட்டன. இதனால் இந்த ஆட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் குறவன், குறத்தி ஆட்டங்களுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குறவன் குறத்தி ஆட்டங்களுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, கலை என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை இழிவுபடுத்தும் 'குறவன் குறத்தி ' நடனத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்ததுபோல பறை அடிப்பதையும் தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக இதேபோல் தண்டோரா போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என விசிக வலியுறுத்தியது. இதனை ஏற்று தண்டோரா போடுவதற்கு தம்ழிநாடு அரசு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.