ஆக்லாந்து Mount Roskill இல் உள்ள Countdown சூப்பர் மார்க்கெட்டில் நள்ளிரவில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hillsborough வீதியில் அமைந்துள்ள குறித்த பல்பொருள் அங்காடியில் நள்ளிரவு 1 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் பல பொருட்களை எடுத்துக் கொண்டு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிப்பதற்காக புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.